வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்: சங்ககிரி தொகுதியில் 2,932 பேர் விண்ணப்பம்
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம்
சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட 311 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
சங்ககிரி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த 311 சிறப்பு மையங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்கக் கோரி, 2,087 பேரும், பெயர் நீக்கம் செய்யக் கோரி 2,55 பேரும், முகவரி மாற்றம் திருத்தம் கோரி 336 பேரும், ஒரே தொகுதியில் பாகம் விட்டு பாகம் மாறுதல் கோரி 254 பேருமாக மொத்தம் 2,932 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
முகாமில் நடைபெற்ற பணிகளை சங்ககிரி வருவாய்க் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம் ஆய்வு செய்தார். சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் 1,040 பேர் விண்ணப்பித்தனர். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் சங்ககிரி சட்டப்பேரவைத் தொகுதியில் 3,972 பேர் விண்ணப்பித்துள்ளனர்.