சேலம்

அரசுப் பள்ளியில் வீரபாண்டிய கட்டபொம்மன்  பிறந்த நாள் விழா

மண்ணூர் மலைக் கிராம அரசுப் பள்ளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 259ஆவது பிறந்த நாள் விழா

DIN

மண்ணூர் மலைக் கிராம அரசுப் பள்ளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 259ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியர் முருகன் தலைமையில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலைக்கிராம அரசுப் பள்ளியில் வீரபாண்டிய கட்டபொம்மன் 259ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியர் முருகன் தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் வெங்கடாஜலம் முன்னிலை வகித்தார். 
இதில் ஆசிரியர் ஜோசப்ராஜ் பேசியதாவது: வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலக்குறிச்சியில் 1760ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி பிறந்தார். வியாபார நோக்கிலேயே இந்தியாவுக்குள் காலூன்றி நம்மை ஆள நினைத்த வெள்ளையர்களுக்கு  எதிராக திகழ்ந்த வீரத்தின் விளைநிலம்தான் வீரபாண்டிய கட்டபொம்மன்.அவரை நினைவுகூரும் இந்நாள் இந்தியர்களாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படும் நாள் எனப் பேசினார். இதையடுத்து, மாணவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். முடிவில் ஆசிரியர் பால்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாமக்கல்லில் கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஏலச்சீட்டு நடத்தி ரூ.15 கோடி மோசடி: பாதிக்கப்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்ற சேலம் வீரா்கள்

வாக்காளா் பட்டியல்: இளம் வாக்காளா்களை சோ்க்க படிவங்கள் விநியோகம்

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT