சேலம்

வாழப்பாடியில் திருவள்ளுவர் தின விழா

DIN

வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், 24 -ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் சமூக சேவகர்கள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி இலக்கியப் பேரவை சார்பில், ஆண்டுதோறும் பொங்கல் விழாவோடு திருவள்ளுவர் தின விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இலக்கியப் பேரவை 24-ஆம் ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் சமூக சேவகர்கள், சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா புதன்கிழமை வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு, இலக்கியப் பேரவைத் தலைவர் இல.ராமசாமி தலைமை வகித்தார். தாளாளர் செந்தில்குமார் வரவேற்றார். அரிமா சங்க நிர்வாகி எம்.சந்திரசேகரன், ஆசிரியர் கோ.முருகேசன், கிறிஸ்தவ திருச்சபை பி.லாசர், ஜாமியா மசூதி முகமது சித்திக்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இலக்கியப் பேரவைச் செயலர் ஆசிரியர் சிவ.எம்கோ தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சமூக சேவை, ஆன்மிகம் மற்றும் மருத்துவப் பணியில் சாதனை படைத்த தேவராஜன், பழ.மூர்த்தி, மருத்துவர் மோதிலால், சத்தியநாராயணன் மற்றும் 1,330 திருக்குறள் ஒப்புவித்த 9-ஆம் வகுப்பு மாணவி ஆர்.சுபா ஆகியோருக்கு, இலக்கிபப் பேரவை நிர்வாகிகள்  சிவ.எம்கோ, மா.கணேசன், ஸ்ரீமுனிரத்தினம், பெரியார்மன்னன் ஆகியோர் விருதுகள் வழங்கி பாராட்டினர் .
இதில், பி.என்.குணசேகரன், சாய்பாபா அறக்கட்டளை ஜவஹர், கமலாலயம் ஆதிராஜன், ஆடிட்டர் குப்பமுத்து, அரிமா சங்கத் தலைவர் வெற்றிச்செல்வன், பாலமணிகண்டன், ஆசிரியர் செல்வம், சுப்பிரமணியன், இஸ்கப் சிதம்பரம், ஈஆர்கே, பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் அனைவருக்கும் சமபந்தி விருந்து வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT