சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து 202 கனஅடியாகச் சரிவு

DIN


காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து  தொடர்ந்து சரிந்து வருகிறது.
இந்த நிலையில்,  வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 248 கனஅடியாக இருந்த  அணையின் நீர்வரத்து,  சனிக்கிழமை காலை நொடிக்கு  202 கனஅடியாகச் சரிந்தது.  அணையிலிருந்து குடிநீர்த் தேவைக்காக நொடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணைக்கு வரும் நீரின் அளவைவிட  குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால்,  வெள்ளிக்கிழமை காலை 41.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம்  சனிக்கிழமை காலை 41.61 அடியாகச் சரிந்தது.  அணையின் நீர் இருப்பு 12.93 டி.எம்.சி.யாக  இருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT