சேலம்

கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்

DIN

துலுக்கனூர் ஊராட்சியில் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், உடனடியாக சீர் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள துலுக்கனூர் ஊராட்சியில், இந்திரா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாராமல் கடந்த இரண்டு மாதங்களாக கிடப்பில் உள்ளன. இதனால், கால்வாய்களில் கழிவுநீர் நிரம்பி தெருவில் வழிந்தோடுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காய்ச்சலால் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும், கொசுத் தொல்லை, பாம்பு, புழுக்கள் என வீட்டில் நுழைவதாக குற்றம்சாட்டுகின்றனர். குடிநீர் விநியோகத்தின் போது, கழிவுநீரில் குடம் வைத்து பிடிக்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, இதனை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

SCROLL FOR NEXT