சேலம்

மேட்டூர் அணை பூங்காவுக்கு  சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

DIN

மேட்டூர், ஜூன் 13: மேட்டூர் அணை பூங்கா-வுக்கு வரும் பார்வையாளர்களின் கூட்டம் வெகுவாக குறைந்தது. சேலம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மேட்டூர் அணை பூங்காவுக்கும் வந்து செல்வது வழக்கம்.
மேட்டூர் அணையை ஒட்டி 33 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது மேட்டூர் அணை பூங்கா. இங்கு பார்வையாளர்களை கவருவதற்கு பல்வேறு சிற்பங்களும், மான் பண்ணை,  பாம்பு பண்ணை போன்றவைகளும் உள்ளன.
சிறுவர், சிறுமியரை மகிழ்விக்க சிறுவர் பூங்காவில் சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் போன்றவைகளும் உள்ளன.
கோடை விடுமுறை தினங்களில் நாள் ஒன்றுக்கு பத்தாயிரத்திற்கு குறையாமல் பார்வையாளர்கள் வந்து சென்றனர். தற்போது பள்ளிகள் துவங்கிவிட்டபடியால் பார்வையாளர்கள் கூட்டம் வெகுவாக குறைந்து போனது. வியாழக்கிழமை மேட்டூர் அணை பூங்காவுக்கு 1,560 பார்வையாளர்கள் மட்டுமே வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர்கள் கட்டணமாக ரூ. 7,830 வசூலானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT