சேலம்

வனப்பகுதியில் 31 கௌதாரி பறவைகளை பிடித்த இருவர் கைது

DIN

வாழப்பாடி அருகே வனப் பகுதியில்  31 கௌதாரி பறவைகள் மற்றும் முயலை பிடித்த இருவரை வனத்துறையினர் கைது செய்து, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். 
வாழப்பாடி வனச்சரக காப்புக்காடு வனப் பகுதியில் மர்ம நபர்கள் இரவு நேரத்தில் புகுந்து, அரிதாகி வரும் பறவையான கௌதாரிகளை குறிவைத்து பிடித்துச் சென்று விற்பனை செய்வதாக வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி உத்தரவின் பேரில், வாழப்பாடி வனச்சரகர் பரமசிவம் தலைமையில் வனவர் சிவக்குமார், வனக்காப்பாளர் முனீஸ்வரன், வனக்காவலர் தியாகராஜன், சாந்தக்குமார், தோட்டக்காவலர் முத்தையன்  ஆகியோர்,  சனிக்கிழமை இரவு வெள்ளாளகுண்டம் வனப் பகுதயில்  ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (37), அவரது உறவினர் வாழப்பாடி அடுத்த மின்னாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த  சந்துரு (25) ஆகிய இருவரும், வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து, 31 கௌதாரி பறவைகள் மற்றும் ஒரு முயலை பிடித்துக் கொண்டு தப்பிச்செல்ல முயன்றது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த வனத்துறையினர் தலா ரூ.5 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். 
இவர்களிடம் இருந்து கைப்பற்றிய 31 கௌதாரிகள் மற்றும் ஒரு முயல் ஆகியவற்றை சேலம் குரும்பப்பட்டி வனத்துறை உயிரியல் பூங்காவில் விட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

SCROLL FOR NEXT