சேலம்

அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவு

சேலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுடைய பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை

DIN

சேலத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களுடைய பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக  தொழிலாளர் உதவி ஆணையர் பா.கோட்டீஸ்வரி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலம் தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் பதிவு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
எனவே, உறுப்பினர்கள் உடனடியாக தங்களின் அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஏற்காடு சாலை, வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில், கோரிமேடு, சேலம்-8 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி தங்களின் நலவாரிய எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம். மேலும் ‌l‌o‌s‌s‌s‌s​a‌l‌e‌m@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பியும் இணைத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT