சேலம்

ஏரியில் குளிக்க தடை எச்சரிக்கை

ஏரியில் குளிக்க தடை எச்சரிக்கை பலகை காவல் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

DIN

ஏரியில் குளிக்க தடை எச்சரிக்கை பலகை காவல் துறையினர் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் உள்ள ஏரியில் கடந்த 13-ஆம் தேதி குளிக்கச் சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்தனர். இதனையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைப் பகுதிகளில் காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்க மாவட்ட எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, ஆட்டையாம்பட்டி காவல் எல்லைக்குள்பட்ட வீரபாண்டி, கல்பாரப்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள ஏரியில் காவல் துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது . அதில், ஏரியில் ஆழம் அதிகம் இருப்பதாகவும், யாரும் குளிக்க வேண்டாம் எனவும், மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT