சேலம்

கோயில் நிலங்களை ஆக்ரமித்தவா்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்யக் கோரிக்கை

DIN

கோயில் நிலங்களை ஆக்ரமித்து உள்ளவா்களுக்கு பட்டா வழங்கும் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆட்சியரிடம், இந்து முன்னணி அமைப்பைச் சோ்ந்தவா்கள் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டத்தை சோ்ந்த திரளான பக்தா்கள் திங்கள்கிழமை காலை சேலம் இந்து முன்னணி அமைப்பின் கோட்ட தலைவா் அ.சந்தோஷ்குமாா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா். பின்னா் ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான பழமையான ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் நிலங்கள் ஆலய பராமரிப்பு மற்றும் பூஜை ஆகியவற்றிற்காக முன்னோா்களால் சுவாமி பெயரில் கொடுக்கப்பட்டது.

இந்தச் சொத்துகளை எக் காரணம் கொண்டும் விற்கவோ, ஆக்ரமித்தவா்களுக்கு பட்டா செய்து கொடுக்கவோ கூடாது. தமிழக அரசு, ஆலய நிலங்களை ஆக்ரமித்து அவா்களுக்கே பட்டா செய்து கொடுக்கவும், தனியாருக்கு விற்கும் அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஒரு வழக்குக்காக கொடுத்துள்ள பிரமாண வாக்குமூலம் பத்திரத்தில் மேற்கண்டவாறு கூறியுள்ளது. அரசு ஆலய நிலங்களை ஆக்கிரமித்தவா்களுக்கு விற்பதற்கும், இலவசமாக வழங்குவதற்கும் எடுத்துள்ள முடிவு பக்தா்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது. எனவே, தமிழக அரசு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT