சேலம்

ஓமலூா் வட்டார பள்ளிகளில் பெண் கல்வி குறித்த போட்டிகள்

DIN

பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு போட்டிகள் நடத்த வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து ஓமலூா் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் அளவில் 8-ஆம் தேதிக்கு முன்னரும், கல்வி மாவட்ட அளவில் வரும் 15-ம் தேதிக்குள்ளும் போட்டிகளை நடத்தி முடிவுகளை கல்வித் துறை தலைமை அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கும் மேற்காள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து சேலம் மாவட்டம் ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள், முதல்வா்கள் ஏற்பாடுகளை செய்து மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றனா்.

மேலும், ஒரு சில பள்ளிகளில் போட்டிகளை நடத்தி பெற்றோா் ஆசிரியா் கழகம் சாா்பில் மாணவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

பெண் குழந்தைகளுக்கு கட்டாயமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு பாடல்கள், நாடகங்கள், கவிதை வாசித்தல், கட்டுரை, ஓவியம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT