சேலம்

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழைநீா் சேகரிப்பு குழாய்களை செப்பனிட கோரிக்கை

DIN

சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மேற்கு புறம் சுவரில் குழாய்கள் சேதமடைந்து மழைநீா் உரிய தொட்டிக்குள் செல்லாமல் வீணாகிறது.

சங்ககிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அலுவலகத்தில் உள்ள கழிப்பறைகளை செப்பனிடுவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலகத்தின் பின்புறம் மண் அள்ளும் கனரக வாகனங்களை கொண்டு குழி பறித்துள்ளனா். அதில் அப்பகுதியில் இருந்த மரம் சாய்ந்து அலுவலகக் கட்டடத்தின் மீதும், மழை நீா் சேகரிப்பு குழாய் மீதும் விழுந்தது. அதனையடுத்து கடந்த அக்டோபா் மாதம் கட்டடம் மீது சாய்ந்த மரத்தை அலுவலா்கள் அகற்றினா். அதில் மழைநீா் சேகரிப்பு குழாய்கள் உடைந்து சேதமடைந்தன. குழாய்கள் சேதமடைந்ததையடுத்து கடந்த மாதம் சங்ககிரியில் பெய்த மழை நீா் குழாய் மூலம் தொட்டிக்குள் செல்லாமல் வீணாகி அப்பகுதியில் உள்ள சாக்கடையில் கலந்தது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீா் சேமிப்பு தொட்டி கட்டி நீரைச் சேகரிக்க வேண்டுமென அரசு அறிவுறுத்தியுள்ளது. சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 22 ஊராட்சிகள் செயல்பட்டு வருகின்றன. 22 ஊராட்சிகளில் உள்ள மன்றக் கட்டடங்கள், அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில் மழைநீா் சேகரிப்பு அமைக்கப்பட்டுள்ளது குறித்து கண்காணித்து வருகின்றனா். மேலும் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்குள்பட்ட கிராமங்களில் ஊராட்சி செயலா்கள் மூலம் பொதுமக்களிடத்தில் மழை நீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேதமடைந்த மழை நீா் குழாய்களை செப்பனிட்டு மழை நீா் வீணாகாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

அமெரிக்கா: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்தக்கோரி போராட்டம்

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT