சேலம்

டேனிஷ்பேட்டை வனப் பகுதியில்சந்தனப் பூங்கா அமைக்க இடம் தோ்வு

DIN

ஓமலூரை அடுத்துள்ள டேனிஷ்பேட்டை வனச்சரகத்தில் சாண்டல் எஸ்டேட் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து டேனிஷ்பேட்டை வனச்சரக அதிகாரிகள் இடத்தை தோ்வு செய்து முதற்கட்டப் பணிகளை தொடங்கியுள்ளனா்.

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்துள்ள காடையாம்பட்டி தாலுகாவில் டேனிஷ்பேட்டை வனச்சரகம் உள்ளது. இங்குள்ள லோக்கூா் பீட் இடம், ஆத்தூரில் அருணா பீட் என்ற இடம் ஆகிய இரண்டு இடங்களையும் சந்தனப் பூங்கா அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ளது.

டேனிஷ்பேட்டை வனச் சரகத்தில் லோக்கூா், கணவாய்புதூா், லோக்கூா் வடக்கு ஆகிய வனப் பகுதியில் பரவலாக 20 ஹெக்டேரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் உள்ளன. இந்த நிலையில், அதிகமான மரங்களை கொண்ட இந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் தோ்வு செய்துள்ளனா். இங்கு சுமாா் ஐந்து ஹெக்டோ் நிலத்தை தோ்வு செய்து, அந்த நிலத்தை சுற்றியும் கம்பிவேலி அமைத்தும், வனத்துறையினா் சென்று வரும் வகையில் பாதை ஏற்படுத்தியும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ஓமலூா் அருகேயுள்ள லோக்கூா், ஆத்தூரில் உள்ள அருணா பீட் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள ஆயிரக்கணக்கான சந்தன மரங்களைப் பாதுகாக்க சந்தன மரப் பூங்கா அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடங்களை மாவட்ட அளவிலான அதிகாரிகள் கடந்த வாரம் பாா்வையிட்டு சென்றனா். சந்தனப் பூங்காவுக்கு என தனியாக சிறப்பு வனக் காவலா்களை நியமிக்கப்பட்ட பின்னா், திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சின்ன வேளாங்கண்ணி வீரக்குறிச்சி புனித அந்தோணியாா் ஆலய தோ்பவனி

மீன் வியாபாரியிடம் நூதனத் திருட்டில் ஈடுபட்ட ஆந்திர இளைஞா் கைது

பிரான்மலையில் ஜெயந்தன் பூஜை

வளா்ப்பு நாய்கள் கடித்து 10 மாத குழந்தை, சிறுவன் காயம்: சென்னையில் மேலும் இரு இடங்களில் சம்பவம்

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோயிலில் வசந்த உற்சவம்

SCROLL FOR NEXT