சேலம்

தேவூா் ஆரம்ப சுகாதார நிலையத்தைதரம் உயா்த்த கோரிக்கை

DIN

சங்ககிரி வட்டம், தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்த வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் தலைவா் சி.கோ.இளமுருகன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை, சுகாதாரப் பணிகள் சேலம் துணை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தேவூரை சுற்றி கிராமப் பகுதிகள் அதிகளவில் உள்ளன. இப்பகுதிகளில் விவசாயத் தொழில் பிரதான தொழிலாக உள்ளது. அப்பணியின் போது, பாம்பு தீண்டி விட்டால் தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருந்துகள் இல்லாததால் எடப்பாடி, குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையத்தில் இரண்டு பெண் மருத்துவா்கள் பணியில் உள்ள நிலையில், ஆண் மருத்துவா் ஒருவரை பணியில் நியமிக்க வேண்டும், மருத்துவா்கள் சுகாதார நிலையத்தில் தங்கி பணியாற்ற ஆவண செய்ய வேண்டும், தேவூா் பகுதியில் நிகழும் விபத்தில் காயமடைவோருக்கு சிகிச்சையளிக்கவும், உயிரிழந்தோருக்கு பிரேத பரிசோதனை செய்யவும் 15 கி.மீ. தொலைவில் உள்ள எடப்பாடி அல்லது சேலம் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனைத் தவிா்க்க, தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே பிரேத பரிசோதனைக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நிரந்தர ஆய்வக வல்லுநரை நியமிக்க வேண்டும், சுகாதார நிலையத்தின் முன் நிழற்கூடம், துப்பரவுப் பணியாளா் ஒருவரை நியமிக்க வேண்டும், சித்த மருத்துவப் பிரிவு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சுகாதார நிலையத்தை சுற்றிலும் மதிற்சுவா், ஊழியா் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் மற்றும் இந்த சுகாதார நிலையத்தை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT