சேலம்

5 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளாறு, குடுவாற்றில் வெள்ளப்பெருக்கு

DIN

வாழப்பாடி பகுதியில் இரு தினங்களாக பெய்த பலத்த மழையால் 5 ஆண்டுகளுக்கு பிறகு,  வெள்ளாறு, குடுவாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
ஏராளமான குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் வாழப்பாடி பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாழப்பாடி பகுதியில் கடந்த இரு ஆண்டுகளாகப் போதிய மழையின்றி கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால், நீர்நிலைகள் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அடியோடு சரிந்துபோனது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நீண்டகால பலன் தரும் பாக்கு, தென்னை, வாழை மரங்களும் வெற்றிலைத் தோட்டங்களும் காய்ந்து கருகிவிட்டன. இதுமட்டுமின்றி, விளைநிலத்தில் பயிர்செய்ய வழியின்றி விவசாயிகள் பரிதவித்து வந்தனர்.
இந்த நிலையில், கல்வராயன்மலை, கோதுமலை, ஜம்பூத்துமலை, அருநூற்றுமலை, சந்துமலை, மண்ணூர்மலை, நெய்யமலைப் பகுதிகளிலும், வாழப்பாடி, பேளூர், ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதி கிராமங்களிலும் திங்கட்கிழமை நள்ளிரவு மற்றும் செவ்வாய்க்கிழமை மாலையும் எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டித் தீர்த்தது. 
இதனால், வாழப்பாடி பகுதி விவசாயிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் வெள்ளாறு மற்றும் பெரியகிருஷ்ணாபுரம் குடுவாறு, பொன்னாரம்பட்டி வறட்டாறு, வாழப்பாடி சின்னாற்று நீரோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோலாத்துக்கோம்பை ஏரி, சோமம்பட்டி நாயடிச்சான்குட்டை உள்ளிட்ட பல்வேறு குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன. இதனால், வாழப்பாடி பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரபு மொழியில் பாரதிதாசனின் கவிதைகள் நூல்

சொகுசுப் பேருந்து, காா் மோதல்: பெண் உயிரிழப்பு, 3 போ் காயம்

தொழிலாளி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை: விழுப்புரம் நீதிமன்றம் தீா்ப்பு

எஸ்.பி. அஞ்சலி...

தண்ணீா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT