சேலம்

ஊத்தங்கரை அருகே மான்வேட்டைக்கு சென்றவர் துப்பாக்கி குண்டு பாய்ந்து பலி

DIN

ஊத்தங்கரை அருகே மான்வேட்டைக்கு சென்றவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ளது இளவம்பாடி காப்புக்காடு இந்த காட்டில் வன விலங்குகளான மான், பன்றி என ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் அந்த காட்டில்  பெருமாள்கவுண்டனூர் கிராமத்தை சார்ந்த கமலக்கண்ணன்(21), மகனூர்பட்டியை சார்ந்த சிவா(35)த/பெ ஆறுமுகம் இருவரும் நள்ளிரவில் காட்டிற்கு சென்று உள்ளனர். 

அப்போது காட்டில் மான் வேட்டைக்கு சுறுக்கு வலை வைக்கும் நேரத்தில் திடீரென்று துப்பாக்கியால் யாரோ சுட்டதில், கமலக்கண்ணன் வயிற்று பகுதியில் துப்பாக்கியால் சுடப்பட்டதாக கமலக்கண்ணனே வீட்டில் உள்ள அவரது மனைவி தாயிக்கு தகவல் அளித்து உள்ளனர். பதறிப்போன அவரது குடும்பத்தார்  காட்டில் தேடி கமலக்கண்ணனை கண்டு பிடித்து போது ரத்த வெள்ளத்தில் உயிரிழிந்து உள்ளார். 

பிறகு சடலத்தை பெருமாள்கவுண்டனூர் கிராமத்தில் கொண்டு வந்து உள்ளனர். பிறகு சிங்காரபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடலை காவல்துறையினர் கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைத்து உள்ளனர். இது சம்பந்தமாக சிங்காரபேட்டை இன்ஸ்பெக்டர் குமரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

காப்புக்காட்டில் மான் வேட்டைக்கு சென்று துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து உள்ளது. மேலும் காட்டில் கமலக்கணணனும், சிவாவும் வேட்டையில் சென்றவர்களை மற்ற வேட்டைக்கார சுடப்பட்டு உள்ளனவா என்கிற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உடன் சென்ற சிவாயிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

SCROLL FOR NEXT