சேலம்: இரண்டு முறை பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டுத் தற்கொலை
சேலத்தில் இரண்டு முறை பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் இரண்டு முறை பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு காவலர் சீருடை பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். பாலாஜி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் குடிப்பழக்கம் உடைய பாலாஜி அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும் கடந்தாண்டு மேச்சேரி உதவி ஆய்வாளரின் சட்டையை பிடித்து தகராறு ஈடுபட்டதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதைப்போல அஸ்தம்பட்டி பகுதியில் காவலர் வாகனத்தை விபத்து ஏற்படுத்தியதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் குழந்தை இல்லாத பாலாஜிக்கு தினந்தோறும் மது குடித்து வந்து வீட்டில் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை மனைவி அரை மற்றும் மாமனாரின் அறையை பூட்டிவிட்டு காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கதவு பூட்டப்பட்டு இருப்பதை கண்டு மனைவி நந்தினி கூப்பிடவே அக்கம் பக்கத்தினர் வந்து கதவை திறந்து விட்டுள்ளனர். தொடர்ந்து அறையில் பார்த்தபோது பாலாஜி தூக்கிட்டுத் தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த அஸ்தம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவலர் பாலாஜி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மதுப்பழக்கம் மற்றும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்துள்ளது.
ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.