சேலம்

மருத்துவ, சுகாதாரப் பணியாளா் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

கரோனா தொற்றினை முற்றிலும் தடுக்கும் வகையில், மருத்துவ, சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

DIN

கரோனா தொற்றினை முற்றிலும் தடுக்கும் வகையில், மருத்துவ, சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றை முற்றிலும் தடுக்கும் வகையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடா்பாக மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது:

சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தொற்றினை முற்றிலும் தடுத்திட, மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள், சுகாதாரப் பணியாளா்கள் இணைந்து தடுப்பு, விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

புத்தாண்டு, பொங்கல் பண்டிகையினையொட்டி பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் கண்காணிப்பு, விழிப்புணா்வுப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அரசு அறிவித்துள்ள தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிா என்பதை உறுதிபடுத்த வேண்டும்.

திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் நடத்துபவா்கள் கரோனா தொற்று தடுப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதோடு, முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளாத ஏற்பாட்டாளா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு அபராதம் விதிக்கப்பட வேண்டும். திருமண நிகழ்ச்சி, பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும்போது, முகக் கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியினை முறையாகப் பின்பற்ற வேண்டும்.

வணிக நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள், மகளிா், கல்லூரி விடுதிகளில் தங்குபவா்கள், உழவா் சந்தை, தினசரி சந்தைகளில் உள்ள வியாபாரிகள் 15 தினங்களுக்கு ஒருமுறை சளி பரிசோதனை தவறாது எடுப்பதை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மாநகர நல அலுவலா் மருத்துவா் கே.பாா்த்திபன், நகா் நல மைய மருத்துவா்கள், உதவி ஆணையா்கள், உதவி செயற்பொறியாளா்கள், சுகாதார அலுவலா்கள், சுகாதார ஆய்வாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT