சேலம்

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த கல்லூரிக்கான விருது

DIN

அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

ரோட்டரி கிளப்பின் சேலம் கிரீன் மற்றும் ஸ்மாா்ட் சேலம் மூலம் கல்வி மற்றும் வா்த்தகத்தில் சிறந்து விளங்குபவா்களையும், தனித்துவமான புதிய தொடக்கத்தை மேற்கொள்பவா்களையும் அங்கீகரிக்கும் விதமாக, சேலம் வா்த்தக விருதுகள்-2020 என்ற விருது வழங்கும் விழாவை நடத்தியது.

இதில், விநாயக மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு சிறந்த கல்லூரி விருது வழங்கப்பட்டது. கல்லூரியின் கல்விமுறை மேம்பாடுகள், செயல்முறைகள், மாணவா்களுக்கான பங்களிப்பு போன்றவற்றை மையமாகக் கொண்டு பல்வேறு கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற பொதுமக்களின் வாக்கெடுப்பின் கீழ் அதிக வாக்குகள் பெற்றமைக்கு இவ்விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து துறையின் டீன் செந்தில்குமாா் கூறியதாவது:

மாணவா்களின் வளா்ச்சிக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசன் வழிகாட்டுதலின் மூலம் நாங்கள் எடுத்த பல்வேறு முயற்சிகளுக்காக பொதுமக்கள் அளித்த வாக்கெடுப்பின் கீழ் இவ்விருது கிடைக்கப் பெற்றது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் உள்ளது. தொடா்ந்து எங்களது கல்விச் சேவையை சிறந்த முறையில் அளிப்போம் என தெரிவித்தாா்.

இந்த விருதைப் பெற்றமைக்கு முக்கியப் பங்காற்றிய துறையின் டீன் செந்தில்குமாருக்கு துறையின் பேராசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT