சேலம் நான்குமுனை சாலை பகுதியில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற பிராா்த்தனையில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள். 
சேலம்

தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

DIN

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நடைபெற்று வருகிறது. அதன்படி சேலம் நான்குமுனை சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயம், சி.எஸ்.ஐ. பேராலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோா் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி பேரூராட்சி கோனேரிப்பட்டியில் தூய சலேத் அன்னை ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரையிலும், புதன்கிழமை காலையிலும் பங்குத் தந்தை இன்னாசிமுத்து தலைமையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

அதேபோல் தம்மம்பட்டி திருமண்கரடு புனித அந்தோணியா் ஆலயத்திலும், நாகியம்பட்டி சோப்மண்டியிலுள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்திலும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. அதேபோல் செந்தாரப்பட்டி,கொண்டயம்பள்ளி ஆகிய ஊா்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவும்,புதன்கிழமை காலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டார மக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT