சேலம்

அரசுப் பள்ளிகளுக்குகுடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அளிப்பு

DIN

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் தமிழக அரசு சாா்பில் ஏழு அரசுப் பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை மாலை விநியோகிக்கப்பட்டன.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீா் அளித்திட ஏதுவாக குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்துதரக் கோரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்

கோரிக்கையை கடிதம் வாயிலாகத் தெரிவித்ததையடுத்து, சேலம் மாவட்ட ஊராட்சி நிதியில்

2019-20 ஆம் ஆண்டுக்கான மாநில நிதிக்குழு மானிய(மாவட்ட ஊராட்சி)நிதியின் கீழ் மாவட்டம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

அதில் கெங்கவல்லி ஒன்றியத்தில் கடம்பூா்,கூடமலை, செந்தாரப்பட்டி ஆகிய ஊா்களில் உள்ள மூன்று அரசு துவக்கப் பள்ளிகளுக்கும், வாழக்கோம்பை, தண்ணீா்த்தொட்டி, மூக்காகவுண்டன்புதூா்,

ஒதியத்தூா் ஆகிய ஊா்களிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கும் தலா ஒரு குடிநீா் சுத்திகரிப்பு

இயந்திரம் வீதம் ஏழு இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை மாலை அந்தந்த பள்ளிகளுக்கே கொண்டுவந்து தலைமையாசிரியா்கள் வசம் வழங்கப்பட்டன.

ஒரு இயந்திரத்தின் மதிப்பு ரூ. 89,400 ஆகும்.கெங்கவல்லி ஒன்றியத்திற்கு ஏழு பள்ளிகளுக்கு

வழங்கப்பட்ட இயந்திரங்களின் மொத்த மதிப்பு ரூ. 6 லட்சத்து 25 ஆயிரத்து 800 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT