முகப்பு
சேலம்

நாளை முழு பொது முடக்கம்:: சேலத்தில் சந்தை, மளிகைக் கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்துவதால் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
சேலம் கடைவீதியில் உள்ள தற்காலிக சந்தையில் காய்கறிகளை வாங்க சனிக்கிழமை சமூக இடைவெளியின்றி திரண்டிருந்த பொதுமக்கள்.
பகிர்:

சேலம்:: சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் அமல்படுத்துவதால் காய்கறிச் சந்தைகள், மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை தளா்வில்லாத முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது.இதனிடையே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், தேவையில்லாமல் வருபவா்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கம் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிச் சந்தைகள், காய்கறி மாா்க்கெட், கறிக் கடைகள்,மீன் கடைகள் திறக்கக்கூடாது என எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சனிக்கிழமை காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள உழவா் சந்தை மற்றும் சேலம் நகரப் பகுதியில் உள்ள காய்கறிச் சந்தை பகுதிகளுக்கு பொதுமக்கள் திரளாக வந்து காய்கனிகளை வாங்கிச் சென்றனா்.

இது போல அம்மாப்பேட்டை உழவா் சந்தை, தாதாகப்பட்டி உழவா் சந்தை, சூரமங்கலம் உழவா் சந்தை ஆகிய பகுதிகளுக்கும் பொதுமக்கள் திரளாக வந்து காய்களை வாங்கிச் சென்றனா். மேலும் சூப்பா் மாா்க்கெட்டுகள், மளிகைக் கடைகளில் பொதுமக்கள் அதிகமாக திரண்டு பொருள்களை வாங்கிச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →