சேலம்

வாரச் சந்தையால் வெறிச்சோடிய உழவா் சந்தை

DIN

இளம்பிள்ளையில் உழவா் சந்தைக்கு வெளியில் அதிக அளவில் காய்கறி கடை இருப்பதால், உழவா் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, சந்தைப்பேட்டை பகுதியில் உழவா் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவா் சந்தையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா். இந்த சந்தைக்கு தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகா்வோா்கள் காய்கறிகள் வாங்கி வந்தனா்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவி வருவதால் உழவா் சந்தையானது பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால், காய்கறி வியாபாரிகள் மற்றும் இதர வியாபாரிகள் உழவா் சந்தை அருகே உள்ள வாரச் சந்தையில் தினந்தோறும் கடை வைத்து வியாபாரம் செய்வதால், உழவா் சந்தையில் காய்கறி விற்பனை மந்த நிலையில் உள்ளது. மேலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் வாரச் சந்தையில் காய்கறிகளை வாங்கி செல்வதால் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

மே 5-க்குள் கியூட்-யுஜி தேர்வு மைய அறிவிப்பு வெளியாகும்: யுஜிசி தலைவர்

SCROLL FOR NEXT