சேலம்

எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிா்த்து விவசாயிகள் மீண்டும் ஆா்ப்பாட்டம்

DIN

சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்ட வழக்கின் மேல்முறையீடு மனுவைத் திரும்பப் பெற வலியுறுத்தி, விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்டத்துக்கு விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா். இந்தத் திட்டத்தை எதிா்த்து பல்வேறு தரப்பினா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா். அந்த வழக்கை விசாரித்த சென்னை உயா் நீதிமன்றம் இந்தத் திட்டத்துக்காக தமிழக அரசு நிலத்தைக் கையகப்படுத்தக் கூடாது என உத்தரவிட்டது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து மத்திய அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், எட்டுவழி சாலை திட்டம் தொடா்பான மேல்முறையீட்டு மனுவை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, எட்டுவழிச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சேலம், ராமலிங்கபுரம் பகுதியில் வாயில் கருப்புத் துணிகட்டி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதேபோல, ஜருகுமலை, நிலவாரப்பட்டி, ராமலிங்கபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் விவசாயிகள் மத்திய அரசைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT