சேலம்

கெங்கவல்லி வட்டாரத்தில் சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியத்தில் மானியத்தில் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குநர் சித்ரா வேண்டுகோள் விடுத்து அழைப்பு விடுத்துள்ளார்.   

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கெங்கவல்லி வேளாண்துறை மூலம் சொட்டுநீர்ப்பாசனம் அமைக்க ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் கெங்கவல்லி வட்டார விவசாயிகள்  பதிவு செய்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

இத்திட்டத்தில் சிறு விவசாயிகளுக்கு நூறுசதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், மழைத்தூவாண் அமைத்துக்கொடுக்கப்படுகிறது. 

கெங்கவல்லி வேளாண் துறைக்கு 1445 ஏக்கருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளதால், கெங்கவல்லி வட்டார விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். 

மேலும் சிறுகுறுவிவசாயச் சான்று, கணினி சிட்டா, நில வரைபடம், அடங்கல், ஆதார்நகல், ரேசன்கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் நான்கு ஆகிய ஆவணங்களுடன், கெங்கவல்லியிலுள்ள வேளாண்துறை அலுவலகத்தில் பதிவுசெய்துகொள்ளுமாறு விவசாயிகளை கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உன் பார்வையில்..

இளைஞர் பலி: பம்மல் மருத்துவமனையை மூட உத்தரவு

நீலகிரியில் மே 10ல் உள்ளூர் விடுமுறை!

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

SCROLL FOR NEXT