மேட்டூர் அணையிலிருந்து கடந்த 12ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இன்னும் முக்கொம்பு மேலணைக்கு வந்து சேரவில்லை.
காவிரி, டெல்டா குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் திங்கள்கிழமை காலை முக்கொம்புக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டைவாய தலை அருகேதான் வந்துள்ளது. முக்கொம்பு வர மாலையாகும் எனக் கூறப்பபடுகிறது.
இந்த நிலையில் தண்ணீர் கல்லணை வந்து பாசனத்திற்கு திட்டமிட்டபடி செவ்வாய்க்கிழமை காலை திறக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.