வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
வீரகனூர் பேரூராட்சி 11வது வார்டு பெரிய துரை என்பவருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில், தண்ணீர் தேடி வந்த 2 வயது புள்ளி மான் தவறி விழுந்து நீரில் தத்தளித்தது.
தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின் உயிருடன் மீட்டனர்.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட புள்ளிமான், வீரகனூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின் வனப்பகுதியில் விடப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.