முகப்பு
கிரிக்கெட்

கிட்னியைத் தொடும் பதிவு..! பும்ராவைக் கேலி செய்த மனைவி!

இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவைக் கேலி செய்த அவரது மனைவி சஞ்சனாவின் கமெண்ட் குறித்து...

Updated On : 16 மார்ச் 2026, 6:05 pm IST
மனைவி சஞ்சனாவுடன் பும்ரா. - படம்: இன்ஸ்டா/ ஜஸ்ப்ரீத் பும்ரா.
பகிர்:

இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்ப்ரீத் பும்ராவைக் கேலி செய்த அவரது மனைவி சஞ்சனாவின் கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்ல பந்துவீச்சில் முக்கியமான காரணமாக ஜஸ்ப்ரீத் பும்ரா இருந்தார். இந்த உலகக் கோப்பை மட்டுமல்லாமல், முந்தைய இரண்டு ஐசிசி கோப்பைகள் வெல்லமும் காரணமாக அமைந்தார்.

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளராக இருக்கும் பும்ராவுக்கு கடந்த 2021ல் மார்ச் 15ஆம் தேதி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு 2023ல் அங்காத் எனும் ஆண் குழந்தைப் பிறந்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், திருமண நாளுக்காக மனைவி சஞ்சனாவுக்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் பும்ரா, “திருமண நாள் வாழ்த்துகள்” எனக் கூறியிருந்தார்.

இந்தப் பதிவுக்கு அவரது மனைவி சஞ்சனா, “கிட்னியைத் தொடும் பதிவு அன்பரே” எனக் கேலி செய்துள்ளார். இந்தக் கமெண்ட் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இருவரும் நல்ல தம்பதிகளாக இருந்து வருகிறார்கள். பும்ரா குறித்து அடிக்கடி எதாவது சுவாரசியமான விஷயங்களைச் சொல்லி அவரது மனைவியும் சமூக வலைதளத்தில் வைரலாகுவார்.

சமூக வலைதளத்தில் பெரிதாக ஆர்வம் இல்லாத பும்ராவின் திருமண வாழ்த்தைக் கேலி செய்த சஞ்சனாவின் பதிவை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பகிர்ந்து, “இணையர்களின் இலக்கு” எனக் கூறி வருகிறார்கள்.

summary

A Kidney touching post..! Bumrah's wife Sanjana Ganesan mocked him!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments