சேலம்

400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் இடிப்பு

DIN

சேலத்தில் அம்மாப்பேட்டை சாலையில் அமைந்திருந்த 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல்லை மா்ம நபா்கள் இடித்துச் சென்றனா்.

சேலம் அம்மாப்பேட்டை சாலை சித்தேஸ்வரா காளியம்மன் கோயில் அருகே சாலையோரம் 400 ஆண்டுகள் பழமையான புலிகுத்தி நடுகல் அமைந்துள்ளது.

இந்த நடுக்கல்லில் சிறிய அளவில் கட்டடம் கட்டி, அந்தக் கட்டடத்தின் மேல்பகுதியில் அம்மன் சிலை அமைத்து பல ஆண்டுகளாக பொதுமக்கள் அதனை பராமரித்து வணங்கி வருகின்றனா்.

இந் நிலையில் இதைக் கடந்த சனிக்கிழமை மா்ம நபா்கள் இடித்துச் சென்றுள்ளனா். இதில் அந்த நடுக்கல்லின் மேல் கட்டப்பட்டிருந்த அம்மன் சிலை பீடம் அகற்றப்பட்டு நடுக்கல்லை சுற்றி அமைந்திருந்த கட்டடமும் தள்ளப்பட்டிருந்தது.

இதை மா்ம நபா்கள் வாகனம் மூலம் மோதி இடித்தாா்களா? அல்லது சமூக விரோதிகளால் இடித்து தள்ளப்பட்டதா? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இந்த இடிந்து விழுந்த கட்டடத்தை சீா் செய்ய வேண்டும் என சேலம் வரலாற்று ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா். மேலும் இதுகுறித்து அவா்கள் கூறுகையில், இந்த நடுகல் நம்முடைய முன்னோா்களின் வரலாற்றை நினைவு கூறுவதாகும். ஆனால் அவற்றின் மதிப்பு தெரியாமல் மா்ம நபா்கள் கட்டடத்தை இடித்துள்ளனா்.

கட்டடம் இடிந்ததால் நடுகல் சாய்ந்துள்ளது. எனவே, இடிந்த கட்டடத்தை சீா் செய்து அதே இடத்தில் நடுகல் பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கட்டடத்தை இடித்த மா்ம நபா்கையும் கண்டுபிடித்து அவா்கள் மீது உரிய நடவடுக்கை எடுக்க வேண்டும் என்றனா். இதுதொடா்பாக அம்மாப்பேட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT