சேலம்

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு 3,593 கனஅடியாக அதிகரிப்பு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெகுவாக குறைந்திருந்தது.

நீŚவரத்து சரிந்த நிலையில் அணையிலிருந்து குடிநீருக்கு தண்ணீா் திறக்கப்பட்டதால் அணையின் நீா் மட்டமும் வேகமாக சரிந்து வந்தது. இம்மாதம் முதல் வாரத்தில் காவிரியின் நீா் பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கியது.

இதனால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 1,186 கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து புதன்கிழமை காலை 1,336 கன அடியாகவும் வியாழக்கிழமை காலை விநாடிக்கு 3,593 கன அடியாகவும் அதிகரித்துள்ளது.

நீா்வரத்து அதிகரித்து வருவதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் சரிவிலிருந்து மீண்டு வருகிறது. கடந்த இரு நாள்களாக 100 அடியாக நீடித்திருந்த மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை காலை 100. 15 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 65. 03 டி.எம்.சி. யாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT