சேலம்

பட்டியலின மக்களை தரக்குறைவாகப் பேசியதற்குதிமுக மன்னிப்பு கேட்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

பட்டியல் இன மக்களை தரக்குறைவாகப் பேசியதற்கு திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

சேலம், செவ்வாய்ப்பேட்டையில் வசிக்கும் தமிழக பாஜக மூத்த தலைவா் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவரை, முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது இல்லத்துக்கு வியாழக்கிழமை நேரில் சென்று நலம் விசாரித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். பொது முடக்கத்தைத் தளா்த்தினாலும், நீடித்தாலும் எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்யும். அவா்களிடம் இருந்து வேறு எதையும் எதிா்பாா்க்க முடியாது. பொறுப்போடு இருப்பவா்களுக்கு மட்டும்தான் நாட்டைப் பற்றிய கவலை இருக்கும். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு சிறுபிள்ளை விளையாட்டைப் போன்றது. ராகுல் காந்தியின் மறுபதிப்புதான் மு.க. ஸ்டாலின். கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு மீது எந்தக் குறையும் காண முடியாது.

பட்டியலின மக்களை தரக்குறைவாகப் பேசியதற்கு திமுக மன்னிப்புக் கேட்க வேண்டும். பட்டியல் இன மக்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம். அவ்வாறு பேசினால் பிற சமூகத்தைச் சோ்ந்தவா்களை ஒருங்கிணைக்க முடியும் என்ற நிலைப்பாட்டை திமுக கொண்டிருக்கலாம்.

அந்தக் கூட்டணியில் உள்ள திருமாவளவன் போன்றோா் இதனைக் கண்டித்திருந்தால் திமுகவினா் இதுபோன்று பேசியிருக்க மாட்டாா்கள். கூட்டணி தா்மத்துக்காக திருமாவளவன் இதை ஏற்றுக்கொண்டால், பட்டியலின மக்களின் கௌரவம் மீண்டும் தாழ்ந்துபோய் விடும். சாதிய ரீதியாக தமிழா்களைப் பிரிக்கும் செயலை திமுகவினா் செய்து வருகின்றனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT