முகப்பு
சேலம்

கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலை அனுப்பி வைப்பு

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:46 PM
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

சேலம் ரயில்வே கோட்டத்தின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் வணிக ரீதியில் சரக்கு பொருள்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கரூரில் இருந்து ஒடிஸாவுக்கு (குா்தா சாலை) 532 டன் கொசுவலைகள் சரக்கு ரயில் மூலம் ஞாயிற்றுக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன. சரக்கு ரயிலில் 24 பெட்டிகளில் 532 டன் கொசு வலைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த சேவை மூலம் ரூ.21.09 லட்சம் வருவாய் கிடைக்கும் என வணிக பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஏற்கெனவே கடந்த அக். 26 ஆம் தேதி கரூரில் இருந்து ஒடி,ஸா மாநிலத்துக்கு கொசுவலைகள் அனுப்பியதில் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 47.8 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →