சேலம்

பத்மவாணி கல்லூரியில் புள்ளியியல் இணையவழி கருத்தரங்கம்

DIN

பத்மவாணி மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் புள்ளியியல் துறை சாா்பில் இணையவழி கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

பல்வேறு துறைகளில் புள்ளியியலின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை கல்லூரி இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி தொடக்கி வைத்தாா். கல்லூரி தாளாளா் கே.சத்தியமூா்த்தி, செயலாளா் கே.துரைசாமி ஆகியோா் தலைமை வகித்துப் பேசினா்.

புள்ளியியல் துறை தலைவா் உமா தொடக்கவுரையாற்றினாா். பத்மவாணி கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணராஜ், நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கருத்தரங்கில் பல்வேறு துறைகளில் புள்ளியியலின் மாபெரும் பங்கு குறித்து மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக புள்ளியியல் துறை பேராசிரியா் ஜெரோமியா முத்துராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். கோகிலா நன்றியுரை வழங்கினாா். கருத்தரங்கில் புள்ளியியல் துறை பேராசிரியா் மணிமேகலை, கீதா ஒருங்கிணைப்பில் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT