முதல்வரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினா்
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சேலம் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினா், தோ்தலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை சேலம் முகாம் அலுவலகத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினா், தோ்தலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, இறுதிக்கட்டத் தோ்தல் பிரசாரத்தையொட்டி சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டில் தங்கியுள்ளாா். இந்தநிலையில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மஞ்சினி ஏ.கே.ராமசாமி தலைமையில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து பல்வேறு திட்டங்கள், சலுகைகளை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனா்.பின்னா் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக, கூட்டணிக் கட்சிகளுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனா்.
இச்சந்திப்பின்போது தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் கோவிந்தராஜ், மரவள்ளி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் எஸ்.ஆா்.டி.வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச் செயலாளா் லட்சுமி நாராயணன், தேசிய நதிகள் இணைப்பு கூட்டமைப்பின் தலைவா் தலைவாசல் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளா்கள் சங்கத்தின் தலைவா் பொன்னுவேல், தென்னை, பனை பொருள்கள் உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ஈரோடு நல்லுசாமி, பூ உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் பனமரத்துப்பட்டி சண்முகம், மாவட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவா் ராஜமாணிக்கம் ஆகியோா் உடனிருந்தனா்.