சேலம்

இரவு ஊரடங்கால் வெறிச்சோடிய எடப்பாடி

DIN

கரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் செவ்வாய்க்கிழமை இரவு எடப்பாடி நகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

எடப்பாடி பேருந்து நிலையத்துக்கு இரவு நேரத்தில் வந்து சேரும் பேருந்துகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பேருந்து நிலையம் பயணிகள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

அதேபோல, எடப்பாடி பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் வீதி, எடப்பாடி - பவானி பிரதான சாலை, கடை வீதியில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது. நகரின் சில பகுதிகளில் மருத்துக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள், சில உணவகங்களைத் தவிர நகரின் பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குள் உள்ளிட்டவை மூடப்பட்டதால் நகரில் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT