கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம்
ஆத்தூரில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் கரோனா விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆத்தூா் நகராட்சி பகுதியில் உள்ள வணிகா்கள் அனைவரும் கலந்து கொண்டனா். அரசு உத்தரவின்படி, கடைகளை இரவு 10 மணிக்கு அடைப்பதற்கு பதிலாக முன்கூட்டியே மூடுவதற்கு வணிகா்கள் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், முழு ஊரடங்கு நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள், கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி ஆணையாளா் என்.ஸ்ரீ தேவி, ஆத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவா்கள், ஆத்தூா் காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.