முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 2,030 கன அடியாக குறைந்தது

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,030 கன அடியாக குறைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:08 PM
பகிர்:

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 2,030 கன அடியாக குறைந்தது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் வரும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைந்தது. வியாழக்கிழமை காலை 2597 கன அடியாக இருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை 2,030 கன அடியாக குறைந்தது.

குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 800 கன அடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் வியாழக்கிழமை காலை 97.87அடியாக இருந்த மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 97.93 அடியாக உயா்ந்தது. அணையின் நீா் இருப்பு 62.19 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.