வெறிச்சோடிய காவிரி அணை பகுதி 
சேலம்

ஆடிப்பெருக்கு விழாவிற்கு தடை: வெறிச்சோடிய காவிரி அணை பகுதி

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூலாம்பட்டி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

DIN

கரோனா நோய்த்தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பூலாம்பட்டி பகுதியில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள காவிரிக்கரை பகுதிகளில், பெரும் திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி வழிபாடு செய்வது வழக்கம். 

இந்நிலையில், நடப்பாண்டில் கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள காவிரிக் கரையோரங்களில் புனித நீராடவும், வழக்கமான ஆன்மீக செயல்பாடுகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

இதன்படி இன்று முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை, பூலாம்பட்டி காவிரி கடைமடை பகுதி|, படகுத்துறை, பரிசல் துறை, படித்துறை மற்றும் கைலாசநாதர் ஆலயம், நந்திகேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடவும் புனித நீராடி ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபடவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

மேலும் இந்த மூன்று நாட்களுக்கு பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட தடை விதித்துள்ளது. மேலும், அப்பகுதியில் வாடகை ஆட்டோக்கள் டாக்சிகள், விசைப்படகுகள் இயங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள தடை உத்தரவினை அடுத்து, எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் பூலாம்பட்டி காவிரிக் கதவணைப் பகுதி தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் அப்பகுதியில் கூடுதலான எண்ணிக்கையில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT