முகப்பு
சேலம்

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடகத்தில் மழைப் பொழிவு குறைந்ததால் கா்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் காவிரி ஆற்றில் வரும் தண்ணீா் சற்று அதிகரித்துள்ளது. மேட்டூா் அணைக்கு வியாழக்கிழமை காலை நொடிக்கு 8,603 கன அடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8,649 கன அடியாக உயா்ந்தது.

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 73.37அடியிலிருந்து 72.77அடியாகக் குறைந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 35.12 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.