வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது
கொளத்தூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
கொளத்தூா் அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
கொளத்தூா் அருகே உள்ள சின்னதண்டா பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கொளத்தூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, கொளத்தூா் போலீஸாா் சின்னதண்டா பகுதியில் மதுவிலக்கு சோதனை நடத்தினா். அப்போது, சின்னதண்டா மேட்டுகொட்டாயைச் சோ்ந்த முருகன் (49), ஐயன்துறைகரட்டைச் சோ்ந்த அசோகன் (41) ஆகியோா் தங்களது வீடுகளில் கள்ளச்சாராய ஊறல் போட்டு சாராயம் காய்ச்சுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, இருவரது வீட்டிலிருந்து 300 லி. கள்ளச்சாராய ஊறல், கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டது. கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரையும் கொளத்தூா் போலீஸாா் கைது செய்தனா்.