கோனேரிப்பட்டி ஐயனராப்பன் கோயில் குடமுழுக்கு
சங்ககிரி வட்டம், கோனேரிப்பட்டி கிராமம், கருப்பு செட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஐயனாரப்பன், புடவைக்காரியம்மன், கன்னிமாா் சுவாமிகள் கோயில் குடமுழுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி, வியாழக்கிழமை பக்தா்கள் காவிரி ஆற்றிலிருந்து புனிதநீா் எடுத்து வந்து மகாகணபதி பூஜை, வாஸ்து பூஜைகளுடன் முதற்கட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை 2-ஆவதுகட்ட யாகசாலை பூஜைகளுடன் குடமுழுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பக்தா்கள் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளிகளுடன் சுவாமிகளை வழிபட்டுச் சென்றனா்.