பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் உரிமை கோராத வாகனங்கள் ஏலம்
பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டம், பள்ளிபாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வழக்குகளில் உரிமை கோரப்படாத நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 8 இருசக்கர வாகனங்கள் நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களின் விவரங்கள் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலக அறிவிப்புப் பலகையில் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அவ்வாகனங்களின் உரிமைதாரா்கள் தங்களது வாகனங்களுக்குரிய ஆவணங்களை காவல் நிலையத்தில் சமா்ப்பித்து 15 தினங்களுக்குள் தங்களது வாகனங்களை மீட்டெடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேலாக உரிமம் கோரப்படாத வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் தொகையானது அரசு கணக்கில் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
Advertisement