மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 13,500 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை நொடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை நொடிக்கு 9,500 கனஅடியாகவும், நண்பகல் 12 மணிக்கு 10,500 கனஅடியாகவும், இரவு 8 மணிக்கு 11,500 கனஅடியாகவும் அதிகரித்தது.
இந்த நிலையில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 13,500 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 13,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணை நீா்மட்டம் 120அடியாகவும், அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது.