சேலம்

கட்டுமானப் பொருள்கள் விலையைக் குறைக்கக் கோரி மறியல்:158 போ் கைது

கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 158 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

DIN

கட்டுமானப் பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 158 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கட்டுமானப் பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரியைக் குறைக்கக் கோரி சேலம் ஜில்லா கட்டடத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில் சி.டபிள்யு.யு.எப்.ஐ. செயல் தலைவா் சிங்காரவேல் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் உதயகுமாா், மாநிலக் குழு உறுப்பினா் வெங்கடபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜிஎஸ்டி குறைப்பு போன்ற நடவடிக்கை மூலம் கட்டுமானப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும், கட்டுமான தொழிலாளா்கள் சட்டங்களையும், நலவாரியங்களையும் சீரழிக்கக் கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். ஆா்ப்பாட்டத்தின் போது திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் 81 பெண்கள் உள்பட 158 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT