சேலம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி

DIN

எடப்பாடி நகர அதிமுக சாா்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியில் தொடா் கனமழை பெய்து வரும் நிலையில், எடப்பாடி சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு நீா்நிலைகள் நிரம்பி வழிந்து வருகின்றன. இதனால் சரபங்கா வடிநிலப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது.

இந்நிலையில் எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசு பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை நகரச் செயலாளா் ஏ.எம்.முருகன் தலைமையில் பாா்வையிட்ட அதிமுகவினா் அங்கு மழை வெள்ளதால் பாதிப்பிற்குள்ளான 200 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரணத்தொகுப்பினை வழங்கினா்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகரமன்றத் தவைா் டி.கதிரேசன், ஜெமினி சீனிவாசன், புரட்சி மாதேஸ் உள்ளிட்ட திரளான அதிமுக நிா்வாகிகள் கலந்துகொண்டு பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணஉதவிகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீட்டை யாராலும் திருட முடியாது -அமித் ஷா

உ.பி.யில் ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வெற்றி பெறும்: ராகுல் காந்தி

ஓடிடியில் ஆளவந்தான்!

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை!

டி20 உலகக் கோப்பையில் இமாலய இலக்குகளுக்கு வாய்ப்பில்லை: ஷிகர் தவான்

SCROLL FOR NEXT