முகப்பு
சேலம்

ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:38 AM
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழா பகல் பத்து உற்சவம் 3 ம் நாள் திருநாள்.
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா மூன்றாம் திருநாளான திங்கட்கிழமை காலை மூலஸ்தானத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.


மேலும் புகைப்படங்களைக் காண.ஸ்ரீரங்கம்: பகல் பத்து 3ம் நாள் உற்சவம்

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் வெகு விமரிசையாக  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா குறிப்பிடத்தக்கது.

பகல்பத்து, இராப்பத்து என 21 நாள்கள் கொண்டாடப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில் பகல்பத்து விழா சனிக்கிழமை தொடங்கியது. 

இந்த நிலையில் வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து உற்சவத்தின் 3 ம் திருநாளான இன்று காலை, 6:30 மணிக்கு நம்பெருமாள் நித்தியப்படி கிரீடம் புஜ கீர்த்தி, அர்த்த சந்திரன், மகாலட்சுமி பதக்கம், பெருமாள் பதக்கம், வைரஅபய ஹஸ்தம், வைர கைகாப்பு, காசு மாலை, முத்துமாலை, அடுக்கு பதக்கம் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.