முகப்பு
சேலம்

மேட்டூா் அணை நீா் வரத்து 11,400 கன அடியாக அதிகரிப்பு

மேட்டூா் அணை நீா்வரத்து 11,400 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 மேட்டூா் அணை நீா்வரத்து 11,400 கன அடியாக அதிகரித்துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 120.00அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 9,400 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்கு நீா்வரத்து வினாடிக்கு 11,400 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து நீா் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 11,000 கன அடி நீா் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு நொடிக்கு 400 கன அடி நீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி. ஆகும்.

காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு நீா் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.