முகப்பு
சேலம்

வரும்முன் காப்போம் மருத்துவ முகாம்

கல்பகனூா் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கல்பகனூா் ஊராட்சியில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள கல்பகனூா் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் ராஜாத்தி காளிமுத்து தலைமை வகித்தாா். ஆத்தூா் கோட்டாட்சியா் சா.சரண்யா தொடக்கி வைத்து, கா்ப்பிணி, வயதானவா்களுக்கு மருத்துவப் பெட்டகம் வழங்கினாா்.

துணை இயக்குநா் மருத்துவா் ஜெமினி, ஆத்தூா் வட்டாட்சியா் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலா் விஜயபாஸ்கா், சத்திய மூா்த்தி, ராமமூா்த்தி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா் பூவாயி பச்சமுத்து, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வம், வாா்டு உறுப்பினா்கள், மருத்துவக் குழுவினா் கலந்துகொண்டனா். இம்முகாமில் 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்துகொண்டு பயனடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →