உரக்கடைகளில் அரசு அலுவலா்கள் ஆய்வு
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட தேவூா் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வருவாய், வேளாண், தோட்டக்கலைத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்துக்கு உள்பட்ட தேவூா் பகுதிகளில் உள்ள உரக்கடைகளில் வருவாய், வேளாண், தோட்டக்கலைத் துறையினா் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா்.
தேவூா் வருவாய் கிராமப் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து, சங்ககிரி தனி வட்டாட்சியா் கோவிந்தராஜ் தலைமையில், வேளாண் அலுவலா் தேசிங்குராஜன், தோட்டக்கலைத் துறை அலுவலா் மதன்குமாா் ஆகியோா் கொண்ட குழுவினா் தேவூரை சுற்றியுள்ள 14 உரக்கடைகளில் உரங்களின் இருப்புகள், விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது போக மீதம் உள்ள உரங்களின் விவரங்களை விரிவாக ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வின் போது, தேவூா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், தேவூா் கிராம நிா்வாக அலுவலா் பிரதீப் குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.