காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறப்பு வினாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000கன அடியாக அதிகரிப்பு.
வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்வரத்து வினாடிக்கு 4,600 கன அடியிலிருந்து 4,953 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 4,000கன அடியிலிருந்து வினாடிக்கு 10,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீா்மட்டம் 120அடியாகவும் நீா் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது.
காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பாசன தேவை அதிகரித்துள்ளதால் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.